பழைய எலெக்டிரானிக்ஸ் பொருட்களை கொண்டு அயர்ன் மேன் கவச உடையை தத்ரூபமாக வடிவமைத்த ஏழை மாணவன்... முழு கல்வி செலவையும் ஏற்கும் மஹிந்திரா குழுமம்
அயர்ன் மேன் ஹாலிவுட் படத்தில் நாயகன் டோனி ஸ்டார்க் அணிந்து வரும் கவச உடையை தத்ரூபமாக வடிவமைத்த ஏழை மாணவனின் முழு கல்வி செலவையும் ஏற்கப்போவதாக மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துளார்.
மணிப்பூரைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர், பழைய எலெக்டிரானிக்ஸ் பொருட்கள், கார்ட் போர்டை கொண்டு அயர்ன் மேன் உடையை வடிவமைத்த வீடியோவை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, பிரேமின் வீட்டுக்கு ஒரு குழுவை அனுப்பினார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பிரேம்,மெக்கானிக்கல் துறையில் உள்ள ஆர்வமிகுதியால் எந்த வித அடிப்படை பயிற்சியுமின்றி சுயமாக கற்றுக்கொண்டு அயர்ன் மேன் உடையை உருவாக்கியது தெரியவந்தது.
கலை படிப்பு படித்து வரும் பிரேம் மெக்கானிக்கல் இன்ஜனியரிங் படிக்க வேண்டுமென ஆசை இருப்பதாக தெரிவித்த நிலையில், பிரேம் மற்றும் அவரது உடன்பிறந்தவர்களின் கல்வி செலவை மஹிந்திரா குழுமமே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.
Comments