கோரக்பூரில் காவலர்களால் தாக்கப்பட்ட வியாபாரி உயிரிழந்த வழக்கு, சிபிஐக்கு மாற்றம்

0 2206

கோரக்பூரில் மனைவியுடன் ஓட்டலில் தங்கியிருந்த கான்புர் வியாபாரி மணிஷ்குப்தா போலீசாரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கை உத்தரப் பிரதேச அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினரால் தமது கணவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவர் மனைவி புகார் அளித்திருந்தார். இதையடுத்து 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையில் தலையில் ஆழமான காயம் இருந்ததாகவும் உடலில் 6 இடங்களில் தடியடி காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 40 லட்சம் ரூபாய் நிவாரணமும் உயிரிழந்த மணிஷ் குப்தாவின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments