ஸ்பெயின் அருகே கடலுக்கடியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு
ஸ்பெயின் அருகே கடலுக்கடியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஸாபியா கடல் பகுதியில் லூயிஸ் லென்ஸ் பார்டோ என்பவரும், அவரது உறவினரும் கடலுக்குள் ஸ்கூஃபா டைவிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடலுக்குள் மின்னிய பொருளை அருகில் சென்று பார்த்த போது, அவை தங்க நாணயங்கள் என்பது தெரியவந்தது.
அந்த நாணயத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய முகங்கள் பொறிக்கப்பட்டிருந்ததால் அவை ரோமப் பேரரசின் காலத்தில் உள்ளவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு நடந்து வருகிறது.
Comments