ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை ; தமிழக அரசு

0 2082
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஸ்ட்ராங்க் ரூம்களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால், உள்ளே தேவையில்லை என்றார்.

முடிந்த அளவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் அதிகாரிகள் நியாயமாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments