பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு வாழ்நாள் தடை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 66 பேருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதில் பலர் பணம் கொடுத்து முறைகேடாக வெற்றி பெற்றது தெரியவந்தது.
முறைகேடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முதற்கட்டமாக 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் 66 பேர் முறைகேடாக வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Comments