கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வரும் 29ந் தேதிக்கு ஒத்திவைப்பு

0 2725

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கு குறித்து புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் உதகை நீதிமன்றத்தில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அப்போது, அரசுத் தரப்பில் தற்போது வரை நடந்த விசாரணை குறித்த அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர், இதுவரை 34 பேரிடம் மேல்விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும், விசாரணை நடத்த நீண்ட அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments