மனிதர்களையே கொல்லும் ஆக்ரோஷமான காசோவரி பறவைகள்... கோழியை போல அருகே வைத்து வளர்த்த ஆதிமனிதர்கள்
மனிதர்களை கொல்லும் அளவுக்கு உலகின் மிக ஆக்ரோஷமான பறவை எனக் கருதப்படும் காசோவரி பறவைகளை ஆதிமனிதர்கள் அந்த காலத்தில் கோழிகளை போல தங்களுடன் வைத்து வளர்த்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஆஸ்திரேலியா, நியூ கினியா ஆகிய பகுதிகளில் இந்த ஆக்ரோஷ Cassowary பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. Cassowary-யின் காலில் உள்ள கூர்மையான கத்தி போன்ற பாகம் ஒரே அடியில் ஆளையே சாகடிக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் Penn State பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் இந்த ஆக்ரோஷ பறவைகளை கோழிகளை போல வளர்த்ததாக கூறப்பட்டுள்ளது.
நியூ கினியாவில் ஆதி மனிதர்களின் குகைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட Cassowary முட்டை ஓடுகள் மூலம் இது நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments