கொரோனா சூழலில் வெளிநாடுகளுக்குச் செல்ல இருந்த தடையை, விலக்கிக் கொள்வதாகப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு
கொரோனா சூழலில் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல ஒன்றரை ஆண்டுக்காலமாக இருந்த தடையை நவம்பர் முதல் விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் உலகையே அச்சுறுத்தியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியக் குடிமக்கள் பிற நாடுகளுக்குச் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்தது.
தடுப்பூசிப் பயன்பாடு, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல இருந்த தடை நவம்பர் முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
இதேபோல் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டுடன் வெளிநாடுகளில் உள்ள ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments