இந்தியாவில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவது விரைவில் தொடங்கும் - நல்வாழ்வுத்துறை செயலர் ராஜேஷ் பூசண்
இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தில் சைடஸ் கடிலா கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார்.
சைடஸ் கடிலா நிறுவனம் டிஎன்ஏ அடிப்படையில் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகஸ்டு மாதம் ஒப்புதல் அளித்தது.
ஊசியில்லாமல் இந்த மருந்து செலுத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முறை மருந்து செலுத்திய பின் 28ஆவது நாளில் இரண்டாவது தவணையும், 56 ஆவது நாளில் மூன்றாவது தவணையும் மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்துவதைக் காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளில் இருந்து தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் விலை குறித்துப் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Comments