மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் மிரட்டிப் பணம் பறித்த புகார், தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில் காவல்துறையினர் தீவிர தேடல்

0 2468

மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் அவரைத் தேடி வருவதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார்.

மிரட்டிப் பணம் பறித்ததாகப் பரம்பீர் சிங் மீது 4 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்ய மும்பைக் காவல்துறை முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீலிடம் வினவியதற்குப் பதிலளித்த அவர், பரம்பீர் சிங் எங்கிருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துடன் சேர்ந்து மகாராஷ்டிரக் காவல்துறையும் தேடி வருவதாகத் தெரிவித்தார்.

அரசின் ஒப்புதல் இன்றி அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்றும், இது குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments