பஹ்ரைனில் இருந்து வாரம் இருமுறை இஸ்ரேலுக்கு வர்த்தக விமான சேவை, விமானக் குழுவினர் கொடி அசைத்து மகிழ்ச்சி

0 1581

இஸ்ரேலுக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான முதல் வர்த்தக விமானம் டெல் அவிவ் நகர் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தை வந்ததடைந்தது.

மனாமாவில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்து வைக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனின் முதல் விமானம் இஸ்ரேலில் தரையிறங்கிய போது,  விமானக் குழுவினர் காக்பிட் ஜன்னல் வழியாக இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments