தென் கொரியாவுடன் ஹாட்லைன் இணைப்பு-வடகொரியா முடிவு
தென் கொரியாவுடன் உள்ள வேறுபாடுகளைப் போக்க ஹாட்லைன் தொலைபேசித் தொடர்பை மீண்டும் தொடங்க வட கொரியா அதிபர் கிம் ஜாங் முடிவு செய்துள்ளார்.
அடுத்த மாதம் வடக்கு தெற்கு கொரியா இடையே நேரடித் தொலைபேசி இணைப்புகள் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கா கொள்கை ரீதியான தெளிவு இல்லாமல் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதற்கு கிம் ஜாங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசின் முடிவுகளுக்கு தலையாட்டும் ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றத்தை இரண்டாவது நாளாக கூட்டிய கிம் ஜாங், தமது அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதார சமூக திட்டங்களை விளக்கினார்.
முன்பு காணாத வகையில் ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை போன்ற ஆயுத பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளது.அமெரிக்காவின் கூட்டாளியான தென் கொரியாவோ அணு ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வட கொரியாவை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.
Comments