கோவாக்சினுக்கு இம்மாதம் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்?

0 2918

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசர கால அங்கீகார பட்டியலில் சேர்க்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த விண்ணப்பம் உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments