தூய்மை பாரதம் 2.0 அம்ருத் 2.0 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தூய்மை பாரதம் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பை பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
அம்ருத் திட்டத்தின் அடுத்த கட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். நகரங்களை குப்பைகள் இல்லாத தூய்மைப் பகுதிகளாக்கவும் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யவும் இத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.
நகரமயமாக்கலின் பாதிப்புகளில் இருந்து மக்களை விடுவிக்கும் தூய்மை பாரதம் திட்டம் மூலம் சுமார் 11 கோடி பேர் பயன் அடைவார்கள்.
இதே போல் ஒருகோடியே பத்து லட்சம் குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் மற்றும் 87 லட்சம் கழிவுநீர் வடிகால்கள் அமைக்கும் திட்டமான அம்ருத் மூலம் 4 கோடி பேர் பயன் அடைவார்கள்.
Comments