மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் அடிப்படை வகுப்புகள் எடுக்க வேண்டும் ; தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் கோரிக்கை
மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், உயர்கல்வியில் முதலாமாண்டு சேர்ந்தவர்களுக்கு அடிப்படை வகுப்புகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து, +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுடைய கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் நேரடியாக முதலாம் ஆண்டு பாடங்களை பயில்வதில் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Comments