போலி ஆவணங்களை சமர்பித்து 13 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கு ; முன்னாள் வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

0 3542
முன்னாள் வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

வீடுகள் கட்ட போலி ஆவணங்களை சமர்பித்து 13 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட 3 பேருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குமரன் என்பவர் சித்தரக்கனி என்ற இடைத்தரகருடன் சேர்ந்து போலி ஆவணங்களை சமர்பித்து கனரா வங்கியில் 13 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த நிலையில், அதற்கு வங்கி மேலாளர் சண்முகமும் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 3 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, சண்முகம் மற்றும் குமரனுக்கு தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும், சித்திரகனிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments