மே.வ.,மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவின் போது திரிணாமூல், பாஜக தொண்டர்களிடையே மோதல்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கொல்கத்தாவின் பவானிப்பூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல இடங்களில் திரிணாமூல், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜகவைச் சேர்ந்த கல்யாண் சவுபேயின் கார் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தின் மற்ற இரு தொகுதிகளிலும் வன்முறை இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி பவானிப்பூரில் 53 விழுக்காடும், சம்சேர்கஞ்சில் 78 விழுக்காடும், ஜங்கிப்பூரில் 76 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியிருந்தன.
#WATCH | West Bengal: A scuffle broke out between BJP and TMC supporters in Bhabanipur assembly constituency, where voting for the by-poll is underway today. BJP leader Kalyan Chaubey's car was allegedly vandalised. pic.twitter.com/TBiPFdsWlI
Comments