கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4-ந் தேதி நேரடி வகுப்புகள் துவங்கும்-கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

0 7273

தமிழகத்திலுள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வருகிற 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் தொடங்க வேண்டும், மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும், கல்லூரி வாசல்களில் முகக் கவசங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments