மும்பை கிங் எட்வர்டு மெமோரியல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று

0 2360

மும்பை கிங் எட்வர்டு மெமோரியல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களில் 27 பேர் ஏற்கனவே தடுப்பூசியின் இரண்டு டோசுகளையும்  போட்டுக் கொண்டவர்கள் என்றும் மும்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று உறுதியானவர்களில் 23 பேர் இரண்டாம் வருடம் எம்பிபிஎஸ் படிப்பவர்கள் என்றும் 6 பேர் முதல் வருட மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதியான 29 பேரில் 2 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நோய்த் தொற்று எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments