சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கையில் அகழாய்வு பணிகள் நிறைவு ; 2,000த்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கையில் நடைபெற்று வந்த 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கின. சுமார் 7 மாதமாக நடந்து வந்த அகழாய்வு பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.
ஆதிச்சநல்லூர், கொற்கையில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே போல் சிவகளையில் 700க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும், 48 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments