விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்

0 5070

தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையின் போது அமைச்சர் பி.டி.ஆர். வைத்திருந்த இரண்டு மடிக்கணினிகளை உள்ளே அனுமதிக்கக் முடியாது என அந்த பாதுகாப்பு படை வீரர் இந்தியில் கூறி தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அவ்வாறு விதிகள் எதுவும் இருக்கிறதா? என கேட்டு அமைச்சரும் ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்த நிலையில், அங்கிருந்த மற்ற அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தி, நிதியமைச்சரை விமானத்தில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments