அமெரிக்காவில் பருவநிலை மாற்றத்திலிருந்து கெல்ப் கடற்பாசிகளை பாதுகாக்க விஞ்ஞானிகள் முயற்சி
அமெரிக்காவில் பருவநிலை மாற்றத்திலிருந்து இயற்கையாக பூமியை காக்கும் ஒருவகை கடற்பாசி குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கலிஃபோர்னியாவின் Mendocino மற்றும் Sonoma County கடல் பகுதியில் கரியமில வாயுவை உறிஞ்சும் கெல்ப் என்று அழைக்கப்படும் கடற்பாசிகளின் எண்ணிக்கையை ட்ரோன் மூலம் ஆராய்ந்து வருகின்றனர்.
அதிலிருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் அவற்றை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக கடல் நீர் வெப்பம், அதிக அமிலத்தன்மை, கெல்ப்களை உண்ணும் sea urchins என்றழைக்கப்படும் கடல் விலங்குகளின் எண்ணிக்கை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கெல்ப் கடற்பாசிகள் அழிந்து வருவதாக கூறப்படுகிறது
Comments