இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற புகார்: யூடியூப் சேனல் நடத்திய 4 பேர் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை

0 4797

நாகை மீனவன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், லேப்டாப்கள், கேமரா உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 இலங்கைக்கு படகு மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கடத்த முயன்றதாக எழுந்த புகாரில்,  நாகை மீனவன் யூடியூப் சேனல் நடத்தி வந்த குணசீலன் உள்ளிட்ட 4 பேர் தலைமறைவான நிலையில், அவர்களது வீடுகளில் 50க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள், 2 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

அதில், குணசீலன் வீட்டில் இரண்டு லேப்டாப்கள், பென்டிரைவ், கேமரா, வங்கி புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், குணசீலனின் நண்பரான பாக்கியராஜின் படகை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments