ஏர் இந்தியாவில் 100 சதவிகிதம் பங்குகளையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் 50 சதவிகிதம் பங்குகளையும் விற்க அரசு நடவடிக்கை...!
ஏர் இந்தியா நிறுவனத்தை யாருக்கு விற்பது என்பதை அரசு இறுதி செய்து விட்டதாகவும், குறைந்தபட்ச விற்பனைத் தொகையை அரசு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவில் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஐம்பது விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக டாட்டா குழுமம், ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் ஆகிய இருவரும் நிதிசார் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளனர்.
15ஆயிரம் கோடி ரூபாய் முதல் 20ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தபட்ச விற்பனை விலையாக அரசு தீர்மானித்துள்ளதாகவும், யாருக்கு விற்பது என்பது குறித்து அரசு இறுதி செய்துள்ள நிலையில் அதை அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments