லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை

0 2337

சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த ஜூலை மாதம் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய லஞ்ச ஒழிப்புத் துறை, அது குறித்து விசாரணை நடத்த  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராவதற்கு கால அவகாசம் கொடுக்குமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments