பேருந்தின் மேற்கூரையில் ஏற முயன்ற பள்ளி மாணவர்களை கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்
சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏற முயன்ற பள்ளி மாணவர்களை கீழே இறங்கச் சொன்ன பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர் வரை செல்லும் 29A வழித்தட பேருந்தை ஓட்டுநர் மோகன சுந்தரம் என்பவர் இயக்கியுள்ளார்.
புரசைவாக்கத்தில் பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி மேற்கூரையில் ஏற முயன்ற முத்தையா பள்ளி மாணவர்களை மோகனசுந்தரம் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது மாணவர்கள் சிலர் மோகனசுந்தரத்தை தாக்கியதாகவும், அதில் ஒரு மாணவர் கல்லை வீசியதால் அவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவர்களைக் கண்டறிய போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Comments