தடுப்பூசிகளுக்கு எதிரான வீடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு
கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராகவும், அது தொடர்பான தகவல்களையும் கொண்ட வீடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தடுப்பூசிகளை ஆபத்தானவையாகவும், அதனால் நீண்டநாள் உடல்நலக் குறைவு ஏற்படுத்தும் என்றும் சித்தரிக்கப்படும் வீடியோக்களும் தடை செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொடர்பான தவறான தகவலை பரப்பியதாக, ரஷ்ய அரசு ஆதரவுடைய செய்தி நிறுவனமான ஆர்.டி.-யின் ஜெர்மன் மொழி யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் நீக்கியது. இதனை அடுத்து, சேனல் மீதான தடையை நீக்கவில்லை என்றால் தங்கள் நாட்டில் யூடியூப் தளம் முடக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments