ஆவி பறக்க அட்லாண்டிக் பெருங்கடலில் கொட்டிய எரிமலைக் குழம்பு ; காற்றின் தன்மையை தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள்
ஸ்பெயினில், அட்லாண்டிக் பெருங்கடலில் எரிமலைக் குழம்பு விழுவதால் வெளிப்பட்ட வாயுவில் நச்சுத்தன்மை உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
10 நாட்களாகக் குமுறி வரும் கும்ப்ரே வியகா எரிமலையில் இருந்து ஆறாக வெளிப்பட்டத் தீக்குழம்பு ஆவி பறக்க அட்லாண்டிக் பெருங்கடலில் கொட்டியது. காற்றின் தன்மையை தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகள் காற்று மாசடையாததாகத் தெரிவித்தனர்.
இருந்தபோதும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டனர்.
Comments