இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு ; ஓட்டுநர்களாக நியமிக்கப்படும் ராணுவ வீரர்கள்
இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ராணுவ வீரர்கள் டேங்கர் லாரி ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதால் வெளிநாட்டவரை லாரி ஓட்டுநர்களாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளுக்கு எரிபொருள் எடுத்து செல்லும் பணிகள் தடைபட்டன. 90 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் எஞ்சிய பங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் தங்களுக்குள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
டேங்கர் லாரி ஓட்டும் பயிற்சி பெற்ற 75 ராணுவ வீரர்கள் டேங்கர் லாரி ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments