பெலாரஸில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி நிறுவன ஊழியர் சுட்டுக் கொலை
பெலாரஸில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி நிறுவன ஊழியரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். அதிபர் லூகஷென்கோவிற்கு எதிரான போராட்டங்களை ஐ.டி ஊழியர்கள் பின்னனியில் இருந்து இயக்கி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைநகர் மின்ஸ்கில், ஐ.டி நிறுவன ஊழியரின் வீட்டை சோதனையிட பாதுகாப்பு படையினர் சென்ற போது சம்பந்தப்பட்ட நபர் கதவைத் திறக்க மறுத்தார். கதவை உடைத்து உள்ளே புகுந்த பாதுகாப்பு படையினர் மீது ஐ.டி நிறுவன ஊழியர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐ.டி ஊழியர் கொல்லப்பட்டார். அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.
Comments