14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ; இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

0 3341
14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ; இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த குணசேகரன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர், 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில் இருவரும் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments