நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கு : வடிவேலு ஆஜராகாததால் வழக்கு தள்ளி வைப்பு

0 3580

நடிகர் சிங்கமுத்து மீதான நிலமோசடி வழக்கில் குறுக்கு விசாரணைக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருங்களத்தூரில் தான் வாங்கிய மூன்றரை ஏக்கர் நிலத்தை சேகர் என்பவரின் பெயரில் அதிகாரப் பத்திரம் பெற்று அதிகத் தொகைக்கு விற்றுவிட்டு தனக்கு குறைவான தொகையை கொடுத்து ஏமாற்றியதாகச் சிங்கமுத்து மீது வடிவேலு புகார் அளித்தார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், வருமான வரி செலுத்தாமல் ஏய்க்கவே வடிவேலு தங்கள் மீது பழி போடுவதாக நடிகர் சிங்கமுத்து, சேகர் ஆகியோர் தெரிவித்தனர். குறுக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி வடிவேலுக்குக் குறிப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி வடிவேலு ஆஜராகாததால் வழக்கு டிசம்பர் 7ஆம் நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments