பழனி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் மின்கசிவு: பின்பக்க கதவின் கண்ணாடியை உடைத்து தாய்மார்கள் வெளியேற்றம்
பழனி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியதால் தாய்மார்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
இங்கு பிரசவத்திற்காகவும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்காவும் பிரத்யேகமாக தனி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 70 படுக்கைகள் கொண்ட பிரசவ வார்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் உடனடியாக வெளியேற முயன்ற நிலையில், பிரதான நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததால் பின்பக்க கதவின் கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.
ஊழியர்கள் உடனடியாக மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்தனர்.
Comments