வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோட்டத்தை தேடி வந்த யானைகள் தண்ணீரில் சிக்கி தத்தளிப்பு

0 2722

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வாழை தோட்டத்தை தேடி வந்த யானைகள் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நிலையில்,  வனத்துறையினர் யானைகளை  காட்டிற்குள் விரட்டினர்.

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லிங்கா புரத்தில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், சிறுமுகை வனப்பகுதிக்குள் இருந்து வாழைத்தோட்டத்தை தேடி லிங்கா புரத்திற்கு வந்த காட்டு யானைகள் கூட்டம்  தண்ணீரில் சிக்கிக்கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்தன.

தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments