ஆயிரம் இடங்களில் பேட்டரி சார்ஜ் ஏற்றும் முனையங்களை அமைக்க பாரத் பெட்ரோலியம் திட்டம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆயிரம் இடங்களில் மின்சாரக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் முனையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 19 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அவற்றுள் ஏழாயிரம் நிலையங்களை எரிவாயு, மின்சாரம், ஹைட்ரஜன், எத்தனால் உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்களை வழங்கும் நிலையங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக மின்சாரக் கார்கள் வைத்துள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆயிரம் இடங்களில் பேட்டரி சார்ஜ் ஏற்றும் முனையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் பெட்ரோலிய சுத்திகரிப்பு, சந்தைப்படுத்தல், இயற்கை எரிவாயு, புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகிய துறைகளில் ஒரு இலட்சம் கோடி ரூபாயை முதலீடும் செய்ய உள்ளது.
Comments