காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் ரூ. 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையோரம் மீட்கப்பட்ட 49 கிரவுண்டு நிலம், அதில் உள்ள கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அதன்பின் பேசிய அவரிடம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்து கோவில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளதாகச் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர், கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Comments