கொரோனாவை கட்டுப்படுத்த பயணத் தடைகளை விதிப்பதை தவிர வேறு வழியில்லை - சீன அரசு
கொரோனாவை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் பயணத் தடை காரணமாக அங்கு மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களும், தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் டெல்லியில் உள்ள சீன தூதரகம் முன் பயணத்தடைகளை விலக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்த கேள்விக்கு பெய்ஜிங்கில் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் உலகின் பல பகுதிகளிலும் கொரானா இப்போதும் நீடிப்பதாக கூறினார். இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்ற சீனர்கள் கூட நாடு திரும்ப இப்போது அனுமதி இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார
Comments