ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபியூமியோ கிஷிடா பதவி ஏற்பார் என தகவல்
ஜப்பானின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபியூமியோ கிஷிடா பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பிரதமராக பதவி ஏற்ற யோஷிகிதே சுகா ஓராண்டு பதவி வகித்த நிலையில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராவார் என்பதால், அதற்கு தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் கிஷிடே வெற்றி பெற்று ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான அவர் ஜப்பானின் அடுத்த பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments