இ-லைப்ரரி, 3டி பிரிண்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் திகழும் அரசுப் பள்ளி...
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த இலளிகத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தனியார் பள்ளிகளில் இருப்பதைவிட மாணவர்கள் அறிவியல் படைப்புகளை உருவாக்க தேவையான ஆய்வகம், அடல் டிங்கரிங் லேப் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடமாடும் ரோபோ உள்ளிட்டவைகள் உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்திலேயே முதன்முறையாக இந்தப் பள்ளியில் தான் இ- லைப்ரரி கணினி மயமாக்கப்பட்ட நூலகம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 3டி பிரிண்டர் வசதியும் இப்பள்ளியில் உள்ளது.
பாடங்களை டிஜிட்டல் முறையில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் தொலைக்காட்சிப் பெட்டி வைத்து அதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.
செயற்கை நீர் ஊற்று, காற்றோட்டமான வகுப்பறைகள், அதிகளவில் மரங்கள் நடப்பட்டுள்ளதால் மாசு இல்லாத காற்று ஆகியவற்றுடன் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Comments