வருமுன் காப்போம் திட்டம் இன்று தொடக்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று தொடங்கி வைக்கிறார்
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் 385 வட்டாரங்கள், 21 மாநகராட்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்து 240 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அறுவை சிகிச்சை மருத்துவர், உடல் நோய் மருத்துவர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்கள் குழு மூலம் பொது மக்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழா சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து வாழப்பாடி சென்று காலை 10 மணியளவில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சோகோ ஆலை உரிமையாளர்கள், மரவள்ளிக்கிழஙகு விவசாயிகள், விசைத்தறி சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
Comments