முதலாவது மின்சார காரை உலக அளவில் இன்று அறிமுகப்படுத்துகிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்
பிரபல கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், தனது முதலாவது மின்சார காரை உலக அளவில் இன்று அறிமுகப்படுத்துகிறது.
பெரும் கோடீசுவரர்களுக்கான இந்த கார், ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும் என கூறப்படுகிறது.
மின்சார கார்களிலேயே சூப்பர் லக்சுரி காராக இருக்கும் என ரோல்ஸ் ராய்ஸ் சிஇஓ Torsten Muller-Otvos தெரிவித்துள்ளார். இன்று வெளியாக உள்ள மின்சார காரின் விலை உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை என்றாலும் அதில் 100kWh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது.
Comments