மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் திடீரெனப் பழுதாகி நின்ற மின் தூக்கி - மாற்றுத்திறனாளி உட்பட சிக்கிக் கொண்ட இருவர்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மின் தூக்கி திடீரென பழுதாகி நின்றதில் உள்ளே சிக்கிய ஒரு மாற்றுத்திறனாளி உட்பட இருவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 30 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாகத்தான் பயன்பாட்டில் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் 2 மின் தூக்கிகள் இயங்கி வருகின்றன.
செவ்வாய்கிழமை மாலை விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ரேஷன்கடை ஊழியர்களான அமுதா என்பவரும் மாற்றுத்திறனாளியான பிரபு என்பவரும் 2வது தளத்திற்குச் சென்றபோது மின் தூக்கி திடீரென பழுதாகி இடையிலேயே நின்றுள்ளது. உள்ளேயிருந்து அவர்கள் கூச்சலிடவே, தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
Comments