பருவநிலை மாற்ற கொள்கைகளால் சூப்பர்கார்கள் மின்சார கார்களாக மாற வேண்டிய நிலைமை
சீறிப்பாயும் அதிவேக சூப்பர்கார்களான பெராரி, மெர்சிடஸ் போன்றவை பருவநிலை மாற்ற கொள்கைகளால் வழக்கமான தங்களது பெட்ரோல் அல்லது டீசல் எஞ்சின்களில் இருந்து மின்சாரத்திற்கு மாற வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மின்சார கார்களில் பொருத்தப்படும் பேட்டரி மிகவும் எடை அதிகமானது என்பதுடன் கார் அதிவேகத்தில் சென்றால் ஓவர்ஹீட் ஆகிவிடும் அபாயமும் உள்ளது. ஆக்ஸ்போர்டில் உள்ள YASA என்ற நிறுவனம். சூப்பர்கர்களை மின்சார கார்களாக மாற்றுவதில் ஏற்படும் சவால்களுக்கு தங்களிடம் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இருப்பதாக இந்த கம்பெனி தெரிவித்துள்ளது.
எல்லா மின்சார கார்களிலும் ரேடியோ மோட்டார் என்ற எலக்ட்ரிக் மோட்டார் இருக்கும். பொதுவாக இது பெரிய அளவிலானது என்பதுடன் எடையும் அதிகமாக இருக்கும். இதனால் சூப்பர்கார்களுக்கு ஏற்படும் சவால்களை சமாளிக்க எடை குறைவான axial flux எலக்ட்ரிக் மோட்டார்களை தயாரிப்பதில் YASA கம்பெனி வெற்றி பெற்றுள்ளது.
Comments