கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவன ஒப்புதல் எப்போது ?
கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்குவது மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை.
இதனால், வெளிநாடுகளுக்கு படிப்புக்காகவும், தொழில் நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் செல்பவர்கள், கோவேக்சின் செலுத்தியவர்களாக இருந்தால், இடையூறுகளையும் கட்டுப்பாடுகளையும் சந்திக்க நேரிடும். இதையடுத்து, கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப ரீதியாக மேலும் பல கேள்விகளை, உலக சுகாதார நிறுவனம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments