காபூலில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு ; காலி கேன்களுடன் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலைநகர் காபுலில் குடி தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காபுல் நகரமே விரைவில் வற்றிப்போகும் அளவுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நகர் மேயர் ஹம்துல்லா நொமானி கவலை தெரிவித்துள்ளார்.
தண்ணீர் கிடைக்காதவர்கள் மசூதி ஒன்றின் கிணற்றில் இருந்து நீரை எடுக்க காலி கேன்களுடன் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்ற நிலையில், பல சமயங்களில் ஒரு கேன் தண்ணீர் கிடைப்பதில் கூட சிரமம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசின் USAID அமைப்பின் தகவல் படி, ஆப்கானில் 42 சதவீத மக்கள் மட்டுமே பாதுகாப்பான குடிநீரை பெறுகின்றனர்.
Comments