காவல் நிலையத்துக்குள் புகுந்து கழுத்தை அறுத்து விடுவதாக காவலரை மிரட்டிய ரௌடி கைது

0 3340

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலரை மிரட்டிய ரௌடி கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அபிராமபுரம் காவல் நிலையத்துக்குள் புகுந்த பிச்சைக் கார்த்தி என்கிற ரௌடி, சக காவலர்கள் முன்னிலையிலேயே சதீஷ்குமார் என்கிற காவலரை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று இரவு அதே பகுதியில் தனியாக வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து கஞ்சா போதையில் பிச்சை கார்த்தி ரகளை செய்துள்ளான்.

அதுகுறித்து விசாரிக்க காவலர் சதீஷ்குமார் சென்றபோது அங்கு கார்த்தி இல்லாத நிலையில், பின்னர் விஷயமறிந்து வந்து காவலரை மிரட்டியது தெரியவந்தது. அந்த நேரம் அவனை மடக்கிப் பிடிக்காமல் காவலர்கள் சமாதானம் செய்து அனுப்பியது சர்ச்சைக்குள்ளான நிலையில், காவல் நிலையத்தில் அவ்வப்போது அவன் எடுபிடி வேலைகள் பார்ப்பவன் என்றும் அதனால் காவலர்கள் அப்படி நடந்துகொண்டனர் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments