சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 வகையான பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

0 3106

சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 வகையான பயிர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். காலநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய 2 பிரச்சனைகளையும் எதிர்கொள்ள இந்த பயிர்கள் உதவும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றங்களாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும் பயிர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இந்த இரட்டை பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 35 வகையான சிறப்பு பயிர்களை உருவாக்கியுள்ளது. கொண்டைக் கடலை, துவரை, சோயா அவரை, சோளம், நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட நெல், கோதுமை என இந்த 35 வகையான சிறப்புத் தன்மை கொண்ட பயிர்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண்மையும், விஞ்ஞானிகளும் இணைந்து பணியாற்றுவது, புதிய சவால்களை எதிர்கொள்ள தேசத்திற்கு வலிமை சேர்க்கும் என கூறினார். பருவநிலை மாற்றங்களின் விளைவாக, புதிய நோய்களும், நோய்த்தொற்றுகள் உருவாகின்றன என்றும், இது மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மட்டுமின்றி பயிர்களையும் பாதிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 6, 7 ஆண்டுகளாக அறிவியல்-தொழில்நுட்பத்தை விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தி வருவதாகவும் மோடி தெரிவித்தார். அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க விதைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments