ரயில் வருவது கூட தெரியாமல் மதுபோதையில் தண்டவாளத்திற்கு நடுவே படுத்து உறங்கிய போதை ஆசாமி..! கடுப்பாகி விரட்டிய பயணிகள்
கோவையில் ரயில் வருவது கூட தெரியாமல் மதுபோதையில் தண்டவாளத்திற்கு நடுவே போதை ஆசாமி படுத்து உறங்கியதாக கூறப்படும் நிலையில், பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு அந்த நபர் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே செல்லும் மெமோ ரயில் நேற்று மாலை வழக்கம்போல் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. துடியலூர் அருகே தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, ஓட்டுநர் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளார்.
அந்த நபர் அசையாத நிலையில், ரயிலை நிறுத்த முயன்றும் மயங்கிக்கிடந்த அந்த நபரைக் கடந்து ரயில் சென்றுவிட்டது. இரயிலுக்குள் இருந்த பயணிகள் பதறியடித்து வந்து பார்த்தபோது, அந்த நபர் கூலாக தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவனை அதட்டி, மிரட்டி எழுப்பி, விரட்டிவிட்டனர்.
Comments