பவளப்பாறை அடுக்குகளின் வண்ணம் வெளுத்து போவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய திட்டம்
ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் என்றழைக்கப்படும் பவளப்பாறை அடுக்குகளின் வண்ணம் வெளுத்து போவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த பவளப்பாறைகள், பருவநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் கடல் நீரின் வெப்பத்தால் வண்ணங்கள் மங்கி வெளுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில், கிளவுட் பிரைட்டனிங் என்னும் தொழில்நுட்பம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
அதன் மூலம் கடலுக்கு மேல் உள்ள மேகங்கள் மேலும் தடிமனாக்கப்பட்டு நேரடி சூரியஒளி கடல் மீது விழுவது குறைக்கப்படுகிறது.
Comments