குழந்தையை கொன்று கொடூரத்தை காட்டிய தாலிபன்கள்

0 4461
குழந்தையை கொன்று கொடூரத்தை காட்டிய தாலிபன்கள்

தாலிபன்களுக்கு எதிரான ஆப்கன் எதிர்ப்பு படையை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு நபரின் குழந்தையை தாலிபன்கள் கொன்று விட்டதாக பஞ்சஷிர் அப்சர்வர் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

தகார் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக டுவிட்டரில் அது குறிப்பிட்டுள்ளது. குழந்தைய கொன்ற இந்த சம்பவம் தங்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது தாலிபன்கள் நடத்தும் கொடூர செயல்களுக்கு சமீபத்திய சாட்சியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 நாடு முழுவதும் தாலிபன் எதிர்ப்பு படையை சேர்ந்தவர்களும்,முன்னாள் அரசு ஊழியர்களும் குறிவைத்து கொல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த வரிசையில் தான் தங்களுக்கு எதிராக சண்டையிடும் ஒருவரின் குழந்தையை தலிபான்கள் கொன்றுள்ளதாக தவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments